தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தொலைக்காட்சி டிஆர்பியில் முன்னிலை வகிக்கும் ராகவா லாரன்ஸ் - ராகவா லாரன்ஸ்

தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ராகவா லாரன்ஸின் 'காஞ்சனா 3' திரைப்படம் டிஆர்பியில் முதலிடத்தை பிடித்துள்ளது.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

By

Published : Jul 10, 2020, 3:08 PM IST

கரோனா வைரஸ் காரணமாக கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருப்பதால் திரையில் ஹிட்டான படங்கள் மற்றும் பழைய தொடர்களை டிவி சேனல்கள் ஒளிபரப்பி வந்தனர்.

இந்நிலையில் மக்களால் அதிகம் பார்க்கப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களின் ரேட்டிங்கை. BARC நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்தவகையில் கடந்த வாரம் ஒளிபரப்பப்பட்ட தொடர்கள் மற்றும் படங்களில் அதிகம் பார்க்கப்பட்டவற்றின் தரவரிசைப் பட்டியலில் முதலிடத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த காஞ்சனா 3 படம் பெற்றுள்ளது.

'பிச்சைக்காரன்' திரைப்படம் இரண்டாவது இடத்தையும், மூன்றாவது இடத்தை ராகவா லாரன்ஸின் 'மொட்ட சிவா கெட்ட சிவா' திரைப்படமும் பிடித்துள்ளது.

அதேபோல் கடந்த வாரம் ஹிந்தி தொலைக்காட்சிகளில் வெளியான ‌‌படங்களின் தரவரிசையில், ராகவா லாரன்ஸின் 'kali ka karishma' படம் டிஆர்பியில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ABOUT THE AUTHOR

...view details