தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தயவு செய்து மறுபரிசீலனை செய்யுங்கள்': தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ்! - Raghava lawrance request to cm

சென்னை: தன்னார்வலர்கள் நேரடியாக உதவக் கூடாது என்கிற உத்தரவை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராகவா லாரன்ஸ்
ராகவா லாரன்ஸ்

By

Published : Apr 13, 2020, 11:34 AM IST

தன்னார்வலர்கள் பொருள்கள் கொடுக்கத் தடை விதித்திருப்பது குறித்து நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

இந்தியா முழுக்கவே கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாளை (14ஆம் தேதி) வரை ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கால் பாதிக்கப்பட்டோருக்குத் திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சிகள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த உதவிக்கு தமிழ்நாடு அரசு நேற்று தடை விதித்தது. அதாவது ஊரடங்கு அமலில் உள்ள இத்தருணத்தில் தன்னார்வலர்கள் பொருள்களை நேரடியாக மக்களுக்கு வழங்கக்கூடாது என்றும், மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இந்த உத்தரவுக்கு பலரும் எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ்

இந்நிலையில் தமிழ்நாடு அரசின் இத்தடை குறித்து நடிகரும், நடன இயக்குநருமான ராகவா லாரன்ஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அனைவருக்கும் வணக்கம்! கரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான, தமிழ்நாடு அரசு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்! அதே சமயம்....

இந்த கரோனா ஊரடங்கினால் சரிவர உணவுப் பொருள்கள் கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு இனி தன்னார்வலர்களோ, தனி நபர்களோ உணவுப் பொருட்கள் எதையும் வழங்கக்கூடாது! என்று தடை விதிக்கப்பட்டுள்ளது! இந்தத் தடை உத்தரவை தயவுசெய்து மறு பரிசீலனை செய்ய வேண்டுமென்று மிகவும் பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்! கரோனா தடுப்பு நிவாரண நிதியை அளித்தக் கையோடு அடுத்த கட்டமாக, நாளை (14ஆம்தேதி) தமிழ்ப்புத்தாண்டு முதல் நானும் எனது நண்பர்களும், தமிழ்நாடு அரசுடன் இணைந்து, ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் வகையில், சில சேவைத் திட்டங்களை செயல்படுத்த தயாராகி வருகிறோம்!

தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்த ராகவா லாரன்ஸ்

இந்நிலையில் தான், நமது தமிழ்நாடு அரசின் இந்த தடை உத்தரவு என் போன்ற தன்னார்வலர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது. நமது அரசு வேண்டுமானால் இப்படி செய்யலாம், தன்னார்வலர்கள் மக்களுக்குப் பொருள்களை வழங்குகிற நடைமுறையில் இன்னும் கெடுபிடியான சட்ட நெறிமுறைகளை வகுத்து, அதனை போலீசாரின் துணையோடு கடைப்பிடிக்குமாறு உத்தரவிடலாம்.

நம்மைப் பொறுத்தவரை, கரோனா வைரஸ் தொற்று விஷயத்தில் தமிழ்நாடு அரசு எடுத்துவருகிற அனைத்து நடவடிக்கைகளும் அருமை! அற்புதம்! அதை மனப்பூர்வமாக பாராட்டுகிறேன்! அதே நேரம், காய்கறி பழங்களை இலவசமாக கொடுக்கக் கூட மனமில்லாமல் குப்பையில் கொட்டுகிறவர்கள் இருக்கிற இதே நாட்டில்தான், அன்பை அளவில்லாமல் கொட்டுகிற தன்னார்வலர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதனால் தன்னார்வலர்கள் நேரடியாக உதவக் கூடாது என்கிற உத்தரவை மட்டும் மறுபரிசீலனை செய்யுமாறு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மிகப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:காதலி எடுத்த புகைப்படத்தை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டராக மாற்றிய விஷ்ணு விஷால்!

ABOUT THE AUTHOR

...view details