திரைப்படத்துறையில் நடன ஆசிரியர், நடிகர், இயக்குநர் என பன்முகம் கொண்டவர் நடிகர் ராகவா லாரன்ஸ். இவர் திரைப்பணியை தவிர்த்து பல்வேறு சமூக சேவைகளிலும், ஆதவரற்றோருக்கு உதவிக்கரம் நீட்டும் நபராகவும் இருந்து வருகிறார்.
குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் என அனைத்து தரப்பினரின் பேரன்பைப் பெற்றிருக்கும் ராகவா லாரன்ஸ் இயலாதவர்களுக்கு தொடர்ந்து உதவிக்கரம் நீட்டி வருகிறார்.
இந்த நிலையில், தனது சமூக வலைதளப்பக்கத்தில் சில செய்திகளைக் கண்டுள்ளார். அதில், கண் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவன், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவன் மற்றும் இதய நோயால் பாதிக்கப்பட்ட இளைஞர்களுக்கு மருத்துவ செலவுக்காக உதவிட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.