கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இதைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால், பல்வேறு துறைகள் நஷ்டமடைந்துள்ளன. இதனைக் கட்டுப்படுத்தும் விதமாக அனைவரும் தங்களால் முடிந்த அளவுக்கு நிதியுதவி அளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடியும், மாநில முதலமைச்சர்களும் வேண்டுகோள் விடுத்தனர். அக்கோரிக்கையை ஏற்று சாதாரண மக்கள் தொடங்கி, உச்ச நட்சத்திரங்கள் வரை அனைவரும் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.
இதையும் படிங்க:சுகாதாரத் துறை பணியாளர்களை கௌரவித்த மோகன்லால்