தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

காஞ்சனா-3 படத்தில் மதன் கார்க்கியின் புதுமையான முயற்சி - kanchana-3

காஞ்சனா-3 படத்தில் பாடலாசிரியர் மதன் கார்க்கியின் புதிய முயற்சியை நடிகரும் இயக்குநருமான ராகவா லாரன்ஸ் வெகுவாக பாராட்டியுள்ளார்.

மதன் கார்க்கி

By

Published : Apr 9, 2019, 4:55 PM IST

நடிகர் ராகவா லாரன்ஸின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'காஞ்சனா 3' படத்தின் அனைத்து பாடல்களும் 'DooPaaDoo' எனும் அமைப்பால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் இசை துறையில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது தான் 'DooPaaDoo' என்ற இணையதளம். சுயாதீன இசைக் கலைஞர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்பு காஞ்சனா-3 படத்தின் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைக்கிறது.

இது குறித்து இந்த அமைப்பின் தலைவர் பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறுகையில்,

இது என்னை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. நான் இதை பெருமையால் சொல்லவில்லை. திறமையான சுயாதீன கலைஞர்கள் எங்கள் தளத்தின் மூலம் இசைத்துறையில் புகழ் பெறுவது மகிழ்ச்சி அளிக்கிறது. 2017-ல் ராகவா லாரன்ஸ் மாஸ்டரை சந்தித்தபோது, நாங்கள் அவருக்கு 'DooPaaDoo' பற்றிய புதிய கருத்துகளை அறிமுகப்படுத்தினோம். புதிய முயற்சிகளை பரிசோதித்து பார்க்க எந்த தயக்கமும் இல்லாமல் ஒப்புக் கொண்டு எங்கள் ஸ்டுடியோவிற்கு அவர் வந்தார்.

அவரது படத்தின் கதையின் சூழ்நிலைகளை அடிப்படையாக கொண்டு பாடல்களை பட்டியலிட்டோம். நாங்கள் அவருக்கு அளித்த அனைத்து பாடல்களையும் கேட்ட அவர், ஆறு பாடல்களை தேர்ந்தெடுத்தார். மேலும் மீதமுள்ள பாடல்களை அவரது அடுத்தடுத்த படங்களில் பயன்படுத்துவதாக எங்களுக்கு உறுதியளித்தார். காஞ்சனா-3ல் மிகவும் தனித்தன்மையான விஷயம் என்னவென்றால், பாடலின் பின்னணியில் உள்ள எந்த பெயரையோ அல்லது கலைஞர்களின் அடையாளங்களையோ நாங்கள் வெளிப்படுத்தவில்லை.

நாங்கள் நினைத்தது வெற்றியாக மாறி, DooPaaDoo-வை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியிருக்கிறது. கலைஞர்களின் பெயர்களை தெரிந்து கொள்ளாமலேயே 'காஞ்சனா-3' பாடல்களை ரசிகர்கள் ரசிப்பதை பார்க்க ஆச்சரியமாக இருக்கிறது. ஒருவேளை இது விரைவில் ஒரு நடைமுறையாகவும் மாறலாம். அதாவது, ஒரு சிறந்த இசையின் வெற்றி கலைஞரின் திறமை, பாடல்களின் தரம் மற்றும் கலையின் புத்துணர்வைப் பொறுத்து இருக்குமே தவிர, அந்த இசையுடன் சம்பந்தப்பட்ட பிராண்டை ஒட்டி இருக்காது என்றார்.

ABOUT THE AUTHOR

...view details