தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

HBD ராதிகா: பப்ளி பெண்ணாய் அறிமுகமாகி திரை ஆளுமையாக உருவெடுத்த லேடி சூப்பர் ஸ்டார்! - ராதிகா சரத்குமார் பிறந்தநாள்

ஃபீல்ட் அவுட் ஆன நடிகைகள் வெள்ளித் திரையில் நுழைந்து சோர்ந்து போய் தங்கள் நடிப்புப் பயணத்துக்கு பை பை சொல்லி வந்த காலம் அது. ஆனால் தன் சித்தி தொடரின் மூலம் ராதிகா செய்தது ஹீரோயினிசத்தின் உச்சம். ஆண்கள் பெருவாரியாக ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாத்துறையில் தனக்கான பாதையை தானே உருவாக்கிக் கொண்டு தவிர்க்க முடியாத ஆளுமையாக உருவெடுத்துள்ளார் ராதிகா.

ராதிகா
ராதிகா

By

Published : Aug 21, 2021, 8:41 AM IST

Updated : Aug 21, 2021, 8:50 AM IST

”பூவரசம்பூ பூத்தாச்சு பொண்ணுக்கு சேதியும் வந்தாச்சு...” என பாரதிராஜாவின் ’கிழக்கே போகும் ரயில்’ படத்தில் வெள்ளந்தியாக பாடியவாறு சுட்டிப்பெண்ணாக அறிமுகமான ராதிகாவை யாராலும் மறக்க முடியாது, அந்தப் பாடலில் வரும் தன்னைத் தானே பார்த்து தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பேட்டிகளில் கேலி செய்து சிரிக்கும் ராதிகாவின் குறும்புத்தனத்தையும் மறக்க முடியாது.

கிழக்கே போகும் ரயில்ராதிகா

பாரதிராஜாவால் அறிமுகம்

கொழும்பு நகரில் பிறந்த ராதிகா, நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகள் என்றாலும் தன் பதின்ம வயது வரை தான் திரைத்துறைக்கு வருவோம் என்ற சிந்தனை கொஞ்சமும் இல்லாமல்தான் வளர்ந்துள்ளார். வெளிநாட்டில் படிப்பை முடித்துவிட்டு வந்த பதின்ம வயது பப்ளி ராதிகா, பாரதிராஜாவின் கண்களில்பட அவரது அடுத்த படத்தின் கரிசல் நில நாயகியாக வெள்ளித் திரையில் அறிமுகமானார்.

கிழக்கே போகும் ரயில்ராதிகா

தமிழ் சினிமாவில் நடிகைகளுக்கான பொதுவான இலக்கணங்களான நடிப்பு, நடனம், நிறம், முக பாவனைகள் என எதையும் பூர்த்தி செய்யாமல், மாநிற பப்ளி நாயகியாக அறிமுகமான ராதிகா, பின்னாட்களில் தன் தனித்துவ நடிப்பால் ரசிகர்களின் மனதை வென்றதோடு, தமிழ் சினிமாவில் ஓர் ஆளுமையாக உருவெடுத்தது வரலாறு.

தங்கை நிரோஷாவுடன் ராதிகா

சரிவர தமிழ் தெரியாமல் அறிமுகமான அதே ராதிகாதான், முதல் மரியாதை ராதா உள்பட பல நாயகிகளுக்கும் டப் செய்துள்ளார் என்பது ராதிகா பற்றிய மேலும் ஒரு சுவாரஸ்ய செய்தி.

மறக்கமுடியாத படங்கள்...

ராதிகா

தமிழ் சினிமாவின் அன்றைய முன்னணி நடிகர்களான ரஜினி, கமலுடன் ஜோடி சேர்ந்து போக்கிரி ராஜா, சிப்பிக்குள் முத்து, ஊர்க்காவலன், நல்லவனுக்கு நல்லவப் என பட கமர்ஷியல் ஹிட் படங்களை வரிசையாகக் கொடுத்த ராதிகா, மற்றொரு பக்கம் கிழக்குச் சீமையிலே, பசும்பொன் என பின்னாட்களில் தன் நடிப்புக்கு தீனி போடும் படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்தார்.

ரஜினியுடன் ராதிகா

முன்னணி நடிகைக்கான தன் காலம் சினிமாவில் முடிந்தாலும், நல்ல குணச்சித்திரப் பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வந்த ராதிகா, சின்னத்திரையில் கால் பதித்து செய்தது மேலும் ஒரு தரமான சம்பவம்!

தமிழ் மக்களின் செல்லமான ’சித்தி’

ஃபீல்ட் அவுட் ஆன நடிகைகள் வெள்ளித் திரையில் நுழைந்து சோர்ந்து போய் தங்கள் நடிப்புப் பயணத்துக்கு பை பை சொல்லி வந்த காலம் அது. ஆனால் தன் சித்தி தொடரின் மூலம் ராதிகா செய்தது ஹீரோயினிசத்தின் உச்சம்.

ராதிகா

பிரபல தொலைக்காட்சியின் ப்ரைம் டைமில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக ஒளிபரப்பான ’சித்தி’ பல அதிரடியாக ஹீரோயின்செண்ட்ரிக் சீரியல்களுக்கும் அடித்தளமிட்டது.

தன் சினிமா கதாபாத்திரங்களால் பெற்ற ரீச்சையெல்லாம் தாண்டி, பட்டி தொட்டியெல்லாம் சென்றடைந்த இத்தொடரின் மூலம் ’சித்தி’ எனவே வாஞ்சையாக பெருவாரியான மக்களால் ராதிகா இன்றும் அழைக்கப்படுகிறார்.

சரத்குமாருடன் திருமணம்

தொடர்ந்து 2001ஆம் ஆண்டு நடிகர் சரத் குமாரை மணந்த ராதிகா, நடிப்பு தாண்டி தன் தனிப்பட்ட திருமண உறவுகள் குறித்து கடும் விமர்சனங்களை சந்தித்தார். ஆனால், அவற்றையெல்லாம் தன் கடும் உழைப்பாலும், அதனால் பெற்ற வெற்றியாலும் தகர்த்து, மக்கள் மனதை இன்று வென்றெடுத்துள்ளார்.

சரத்குமார், ராதிகா

சினிமா, சீரியல்கள் தாண்டி, வெற்றிகரமான பெண் தயாரிப்பாளராகவும் ஜொலிக்கும் ராதிகா, தன் ஜீன்ஸ், சூர்ய வம்சம் கதாபாத்திரங்களின் மூலம் இன்றைய மில்லனியல் கிட்ஸ்களையும் கவர்ந்து இன்றைய மீம்ஸ் உலகிலும் கலக்கி வருகிறார்!

43 ஆண்டு கால சினிமா வாழ்க்கை

சென்ற வாரம் தன் 43 ஆண்டுகால திரைத்துறை பயணம் நிறைவு செய்ததைக் கொண்டாடிய ராதிகா, ‘என்னுடைய தொழில் உன்னோடு இருக்கட்டும்’ என்று என் தந்தை என்னிடம் சொன்ன வார்த்தைகள் இன்னும் என் மனதில் இருக்கின்றன” என நெகிழ்ச்சியுடன் நினைவுகூர்ந்தார்.

ராதிகா

ஆண்கள் பெருவாரியாக ஆதிக்கம் செலுத்தும் தமிழ் சினிமாத்துறையில் தனக்கான பாதையை தானே உருவாக்கிக் கொண்டு தொடர்ந்து வெற்றிகரமாக பயணித்து வரும் ராதிகா எனும் திரை ஆளுமைக்கு ஈ டிவி பாரத் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகள்.

இதையும் படிங்க:43 ஆண்டுகள் நிறைவு- ராதிகாவுக்கு சரத்குமார் வாழ்த்து

Last Updated : Aug 21, 2021, 8:50 AM IST

ABOUT THE AUTHOR

...view details