தமிழ்நாடு

tamil nadu

By

Published : Nov 24, 2019, 5:22 PM IST

ETV Bharat / sitara

சின்னத்திரை 'ஆஸ்கார்' விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட ராதிகா ஆப்தே!

சர்வதேச எம்மி விருதுக்கு பாலிவுட் நடிகை ராதிகா ஆப்தே பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

Radhika Apte

அமெரிக்காவில் இயங்கிவரும் ‘இன்டர்நேஷனல் அகாடெமி ஆஃப் டிவி ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ்’ என்ற அமைப்பு சார்பில் ஆண்டுதோறும் எம்மி விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் இதர பொழுதுபோக்கு தொடர்களின் ஆஸ்கர் என்று இந்த விருது அழைக்கப்படும்.

மொத்தம் 11 பிரிவுகள், 21 நாடுகள், 44 பிரிவுகள் என பரிந்துரை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, பெல்ஜியம், பிரேசில், கனடா, கொலம்பியா, ஃபின்லாந்து, ஃபிரான்ஸ், ஜெர்மெனி, ஹங்கேரி, இந்தியா, இஸ்ரேல், நெதர்லாந்து, போர்ச்சுகல், கத்தார், சிங்கப்பூர், தென் ஆப்பரிக்கா, தென் கொரியா, துருக்கி, அமெரிக்க, இங்கிலாந்து ஆகிய நாடுகளிலிருந்து பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ராதிகா ஆப்தே இன்ஸ்டாகிராம்

இதில், நெட்ஃபிளிக்ஸில் ஒளிபரப்பான 'சேக்ரட் கேம்ஸ்', 'லஸ்ட் ஸ்டோரிஸ்' தொடர்களும் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகும் மியூசிக்கல் ரியாலிட்டி இணைய தொடரான 'தி ரீமிக்ஸ்' தொடரும் எம்மி விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் இந்திய தொடர்கள் பரிந்துரை செய்யப்பட்டிருப்பது இணைய தொடர் ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சிறந்த நடிகைக்கான பிரிவில் நடிகை ராதிகா ஆப்தேவின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதற்கான பதக்கத்தையும் சான்றிதழையும் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த விருதின் வெற்றியாளர்கள் குறித்த அறிவிப்பு நாளை (நவ.25) நியூயார்க்கில் நடைபெறும் விழாவில் அறிவிக்கப்படும்.

ABOUT THE AUTHOR

...view details