தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மருத்துவமனையிலிருந்து திரும்பி தனிமையில் 'கபாலி' நாயகி - கரோனா பாதிப்பு குறித்து ராதிகா ஆப்தே விளக்கம்

சென்னை: கரோனா பாதிப்பட்டிருப்பதாக வெளியான தகவல்களுக்கு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்துள்ள நடிகை ராதிகா ஆப்தே, தன்னை தனிமைப்படுத்திக் கொண்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Radhika apte affected with COVID-19
Actress Radhika apte

By

Published : Mar 30, 2020, 6:42 PM IST

மருத்துவமனைக்கு சென்று திரும்பிய நடிகை ராதிகா ஆப்தே தற்போது தன்னை தனிமைப்படுத்திக்கொண்டிருக்கிறார்.

இது தொடர்பாக ராதிகா ஆப்தே தனது இன்ஸ்டாகிராமில்,

"கர்ப்பமாக இருக்கும் நெருங்கிய தோழியின் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றேன். கோவிட்-19 தொடர்பாக செல்லவில்லை.

யாரும் கவலைப்பட வேண்டாம். எல்லாம் நன்றாக உள்ளது. பாதுகாப்பாகவும், தனிமையிலும் இருக்கிறேன்" என்று முகமூடி அணிந்தவாறு மருத்துவமனையில் அமர்ந்திருக்கும் புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ராதிகா ஆப்தேவுக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் உலா வந்த நிலையில், அதற்கு தற்போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

வித்தியாசமான கதாபாத்திரங்களிலும், அழுத்தமான கேரக்டர்களையும் தேர்வு செய்து நடித்து வரும் ராதிகா ஆப்தே, சினிமா மட்டுமல்லாமல் வெப் சீரிஸ் தொடர்களிலும் படு பிஸியாக உள்ளார்.

இவரது கணவரும், இசைக்கலைஞருமான பெனிடிக்ட் டெய்லர் பிரிட்டனில் வசித்து வருகிறார். இதையடுத்து இருநாடுகளுக்கும் அடிக்கடி பறந்து வரும் ராதிகா ஆப்தா தற்போது பிரிட்டனில் இருந்து வருகிறார்.

தமிழில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் ஜோடியாக நரைமுடியுடன் தோன்றி, தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார் ராதிகா ஆப்தே. அவ்வப்போது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி ரசிகர்களை கிறங்கடித்து வருவதுடன், சர்ச்சைகளையும் கிளப்பியிருக்கிறார்.

தற்போது படப்பிடிப்புக்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் தனது கணவருடன் வீட்டில் இருக்கும் நிலையில், கரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருப்பதற்கு தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இதையும் படிங்க: #HbdRadhikaApte: இந்திய சினிமாவின் மாயநதி - ஒளி பூக்கும் இருள்!

ABOUT THE AUTHOR

...view details