ராதா கிருஷ்ணகுமார் இயக்கத்தில் நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் படம் 'ராதே ஷ்யாம்'. முழுக்க முழுக்க காதலை மையப்படுத்தி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் பிரபாஸூக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். பெரும் பொருள்செலவில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியா, இத்தாலி, பாரீஸ் போன்ற வெளிநாடுகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
யூவி கிரியேஷன்ஸ் தயாரித்து வரும் இப்படம் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், மோஷன் போஸ்டர், போன்றவை முன்னதாக சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றன.