'சாஹோ' திரைப்படத்தைத் தொடர்ந்து நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் திரைப்படம் 'ராதே ஷ்யாம்'. ராதா கிருஷ்ணகுமார் இயக்கிவரும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் தயாராகிவருகிறது. மிக பிரமாண்டமாக உருவாகிவரும் இப்படத்தை யூவி கிரியேஷன்ஸ் தயாரித்துவருகிறது.
இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கு காரணமாகத் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்றுமுதல் (ஜூன் 25) தொடங்கியுள்ளது. மேலும் ஜூலை மாத இறுதியில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.