தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பால் குடிக்கும் குழந்தை சூர்யா' - ராதாரவி கிண்டல் - ராதாரவி

சென்னை: தவறாகப் பேசும் நடிகர்களை ஆறு மாதம் உள்ளே தூக்கிப் போட வேண்டும் என்றும்; அப்போதுதான் பயப்படுவார்கள் எனவும் நடிகர் சூர்யாவை நடிகர் ராதாரவி சாடியுள்ளார்.

surya
surya

By

Published : Sep 22, 2020, 2:17 PM IST

பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சாலிகிராமத்தில் பிரியாணி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ராதாரவி, 'நடிகர் சூர்யா கிண்டியில் பால் குடிக்கும் குழந்தை. சூர்யா எது பேசினாலும் தெளிவு இல்லாமலேயே பேசுகிறார். அவருடைய மனைவியும் அப்படித்தான். கோயிலுக்கு உதவி செய்வதைவிட மருத்துவமனைகளுக்கு உதவி செய்யுங்கள் என்று கூறினார். அப்படி என்றால் ராஜராஜசோழன் என்ன முட்டாளா. ஜோதிகா சார்ந்த மதக்கோயில்களையெல்லாம் இடித்து விட்டு மருத்துவமனை கட்ட வேண்டும் என்று சொல்வாரா. இதெல்லாம் ஒரு படம் வரும் பொழுது, விளம்பரத்திற்காக பேசப்படுவது.

பிரம்பு எப்பொழுதும் நிமிர்ந்து இருந்தால் உடைந்து விடும். அதனால், சில நேரங்களில் வளைந்து கொடுக்க வேண்டும். அதனால், நீதிமன்றம் சூர்யாவை மன்னித்துள்ளது. இதை சூர்யா ஒரு எச்சரிக்கையாகவே பார்க்க வேண்டும். அடுத்த முறை இதுபோன்று பேசினால் தண்டிக்கப்படுவார். இப்படித்தான் நிறைய பேர் எல்லாவற்றையும் பேசிவிட்டு பின் தெரியாமல் பேசி விட்டதாகக்கூறி வருகின்றனர். எனவே, இனிமேல் நடிகர்கள் தெரியாமல் பேசினாலும், ஆறு மாதம் உள்ளே போட்டுப் பாருங்கள். பயப்படுவார்கள். நடிகர்கள் எல்லோரும் தங்களை எம்ஜிஆர் என நினைத்து கொள்ளக்கூடாது' என்று தெரிவித்தார்.

’பால் குடிக்கும் குழந்தை சூர்யா’ - ராதாரவி கிண்டல்

இதையும் படிங்க: மார்பக புற்றுநோயால் அவதிப்படும் நடிகை - மருத்துவ சிகிச்சைக்கு பண உதவி கேட்டு கோரிக்கை

ABOUT THE AUTHOR

...view details