தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

தல அஜித்திடம் பெற்ற வாழ்த்து...நினைவுபடுத்திய பெண் பைக் ரேஸர் - அலிஷா அப்துல்லாவை வாழ்த்திய அஜித்

'சிறுவயதிலிருந்தே எனக்கு பழக்கமான அவர், என் சூப்பர் பைக்கை ஒரு ரெய்டு செய்த பிறகு என்னை வாழ்த்திய அந்த தருணம்' என தல அஜித் தன்னை வாழ்த்திய விடியோவை வெளியிட்டு நினைவுபடுத்தியுள்ளார் பிரபல பெண் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா.

பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா

By

Published : Sep 20, 2019, 11:10 AM IST

Updated : Sep 20, 2019, 2:35 PM IST

சென்னை: ஐந்து ஆண்டுகளுக்கு முன் அஜித்திடம் பெற்ற வாழ்த்து விடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து சிலாகித்துள்ளார் பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா.

இந்தியாவின் முதல் பெண் தேசிய ரேஸிங் சாம்பியன் என்ற பெருமையை பெற்றவர் அலிஷா அப்துல்லா. இவர் தமிழில் வெளியான 'இருப்புக்குதிரை' படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

பைக் ரேஸர் அலிஷா அப்துல்லா

இந்த நிலையில், தல அஜித் வாழ்த்திய விடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், '5 ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த அந்த தருணம்...சிறுவயதிலிருந்தே எனக்கு பழக்கமான அவர், என் சூப்பர் பைக்கில் ஒரு ரெய்டு செய்த பிறகு என்னை வாழ்த்தினார்' என்று குறிப்பிட்டுள்ளார்.

அந்த விடியோவில், கூலிங் கிளாஸ் அணிந்தவாறு இருக்கும் தல அஜித், ஆல் தி பெஸ்ட். டூ வெல். பீ சேஃப் என்று தனது ஸ்டைலில் அலிஷாவிடம் கூறுகிறார். இந்த விடியோ தற்போது இணையத்தில் ஒரு ரவுண்டு வந்துகொண்டிருக்கிறது.

Last Updated : Sep 20, 2019, 2:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details