தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

மலையாளத்தில் அறிமுகமாகும் ராஷி கண்ணா: பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்! - அந்தாதூன் மலையாள ரீமேக்

'அந்தாதூன்' படத்தின் மலையாள ரீமேக்கில் ப்ரித்விராஜூக்கு நாயகியாக நடிகை ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

Rasi Khanha
Rasi Khanha

By

Published : Jan 27, 2021, 3:11 PM IST

பாலிவுட்டில் 2018ஆம் ஆண்டு வெளியாகி பம்பர் ஹிட் அடித்த திரைப்படம் 'அந்தாதூன்'. ஶ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்தப் படம் பல்வேறு பிரிவுகளில் தேசிய விருதையும் பெற்றது. இந்த படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் கைப்பற்றி அவருடைய மகன் பிரசாந்தை வைத்து எடுத்துவருகிறார். இதனை 'பொன்மகள் வந்தாள்' படத்தின் இயக்குநர் ஜே.ஜே.பெட்ரிக் இயக்குகிறார்.

சிம்ரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். சந்தோஷ் நாரயணன் இசையமைக்கிறார். அதே போல் தெலுங்கு, மலையாளத்திலும் இப்படம் ரீமேக் செய்யப்படவுள்ளது.

'அந்தாதூன்' படத்தின் மலையாள ரீமேக் பணிகள் தற்போது மும்முராக நடைபெற்று வருகின்றன. ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் இயக்கவுள்ள இப்படத்தில் ஆயுஷ்மான் குரானா கதாபாத்திரத்தில் ப்ரித்விராஜ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

நாயகியாக நடிகை ராஷி கண்ணா நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று (ஜனவரி 27) பூஜையுடன் தொடங்கியுள்ளது. இப்படத்தின் மூலம் மலையாள திரையுலகில் ராஷி கண்ணா அறிமுகமாகிறார்.

ABOUT THE AUTHOR

...view details