பசுமை இந்தியா திட்டத்தை வலியுறுத்தி தெலங்கானா அமைச்சர் சந்தோஷ் குமார் மரம் நடும் #GreenIndiaChallengeஐ சமூக வலைதளத்தில் அறிமுகப்படுத்தினார். இந்தச் சேலஞ்சில் மரக்கன்று ஒன்றை நட்டு, அதனைப் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு, அது குறித்து எடுத்துச் சொல்லி, மரக்கன்றுகள் நடுவதற்குப் பிறரையும் தூண்ட வேண்டும்.
கைகளை அழுக்காக்கிய 'பர்த்டே பேபி' ராஷி கண்ணா...! - ராஷி கண்ணா லேட்டஸ் செய்திகள்
சென்னை: நடிகை ராஷி கண்ணா ’பசுமை இந்தியா’ சவாலை ஏற்று மரக்கன்றுகளை நட்டுவைத்துள்ளார்.
இந்த சேலஞ்சானது திரைப்பிரபலங்களிடம் பிரபலமாகியுள்ளது. தெலுங்கு பிரின்ஸ் மகேஷ் பாபு தொடங்கி தளபதி விஜய் வரை இந்த சேலஞ்சை ஏற்று செய்துமுடித்துள்ளனர். இந்த நிலையில், நடிகை ராஷி கண்ணா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், இந்த சேலஞ்சை செய்து முடித்து புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதுகுறித்து ராஷி கண்ணா தனது ட்விட்டர் பக்கத்தில், பிறந்தநாளை முன்னிட்டு சிறந்த காரியத்திற்காக எனது கைகள் அழுக்காகியுள்ளது என பதிவிட்டார். இந்த புகைப்படமானது தற்போது சமூக வலைதளத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.