தமிழில் நயன்தாராவை வைத்து நெற்றிக்கண் படத்தை இயக்கிய மிலந்த் ராவ், அடுத்ததாக ராணாவை வைத்து பன்மொழிகளில் உருவாகும் பிரம்மாண்ட படத்தை இயக்கவுள்ளார்.
ராணாவை வைத்து எடுக்கப்படும் இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என பன்மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான விஸ்வாந்தி பிக்சர்ஸ் தயாரிக்கிறது.
ராணாவை வைத்து மிலந்த் ராவ் இயக்கவுள்ள இப்படத்தின் முன்தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. இதன் படப்பிடிப்பு பணிகள் 2022ஆம் ஆண்டு தொடங்கவுள்ளது.
இப்படத்தில் ராணாவுடன் இணைந்து நடிக்கும் நடிகை, துணை கதாபாத்திரங்கள், தொழில் நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: 'நெற்றிக்கண்' ரீமேக்கில் நடிக்கும் அனுஷ்கா?