‘உத்தம வில்லன்’ படப்பிடிப்பின்போது கமல்ஹாசன் நிதி நெருக்கடியை சந்தித்ததாகவும், அப்போது தன்னிடம் ரூ. 10 கோடி வாங்கிவிட்டு தனது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்துக்கு ஒரு படத்தில் நடித்துத் தருவதாக கூறிய கமல், பணத்தை தராமல், கொடுத்த வாக்கையும் காப்பாற்றாமல் ஏமாற்றிவருவதாகவும் ஞானவேல் ராஜா குற்றம்சாட்டினார். இதற்கு மறுப்பு தெரிவித்து கமல்ஹாசனின் ராஜ் கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
ரூ. 10 கோடி வாங்கிய கமல் vs பொய் சொல்கிறார் ஞானவேல் - கோலிவுட்டில் பரபரப்பு - studio green
’உத்தம வில்லன்’ படத்துக்காக கமல்ஹாசன் ரூ. 10 கோடி வாங்கினார் என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா குற்றம்சாட்டியதற்கு ராஜ் கமல் இன்டர்நேஷனல் மறுப்பு தெரிவித்துள்ளது.
அதில், ‘உத்தம வில்லன்’ வெளியான நேரத்தில் ஞானவேல் ராஜா, கமல்ஹாசனுக்கு பத்து கோடி ரூபாய் கொடுத்ததாக பரப்பப்படும் ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் திட்டவட்டமாக மறுக்கிறது. ஞானவேல் ராஜா கமலுக்கு பணம் கொடுத்தார் என்பது அப்பட்டமான் பொய், ஒரு ரூபாய்கூட அவர் கொடுக்கவில்லை என்பதே உண்மை. அவர் பணம் கொடுத்ததாக கூறுவதற்கு எந்த முகாந்திரமும் இல்லை. எனவே கமல்ஹாசன் மதிப்பை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுபவர்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள ராஜ் கமல் இன்டர்நேஷனல் தயாராகி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.