தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

ராய் லட்சுமியையும் விட்டுவைக்காத 'அந்த' ஆசை!

நடிகை ராய் லட்சுமி நடிப்பில் உருவாகியுள்ள 'ஜான்சி ஐபிஎஸ்' படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.

Raai Laxmi

By

Published : Aug 13, 2019, 2:43 PM IST

தமிழ் சினிமாவில் நடிகை ராய் லட்சுமி 'கற்க கசடற' படத்தின் மூலம் அறிமுகமானவர். இதைத் தொடர்ந்து 'தாம் தூம்', 'மங்காத்தா', 'வாமனன்', 'முத்திரை', 'காஞ்சனா' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ராய் லட்சுமி படங்களில் நடித்துவந்தாலும் அவ்வப்போது நண்பர்களுடன் வெளியில் சென்று புகைப்படம் எடுத்து தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். அதிலும் அவர் வெளியிடும் பிகினி படத்தை ரசிகர்கள் வைரலாக்கியும் வருவர்.

இந்நிலையில் இவர், 'ஜான்சி ஐபிஎஸ்' என்ற கன்னட திரைப்படத்தில் காவல் துறை உயர் அலுவலராக நடித்துள்ளார். ராய் லட்சுமியுடன் ஸ்ரீஜித், முகேஷ் திவாரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பி.வி.எஸ். பிரசாத் இயக்கியுள்ள இப்படத்தை ராஜேஸ் குமார் தயாரித்துள்ளார்.

இப்போது திரைத் துறையில் அனைத்து முன்னணி கதாநாயகர்கள், கதாநாயகிகள் காவல் துறை வேடங்களில் நடிக்க விரும்பிவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details