சீனா, உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் கரோனா வைரஸ் மிக வேகமாகப் பரவிவருகிறது. இந்த வைரஸ் தாக்குதல், உலக மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலால் இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகவும், 5000-க்கும மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் கரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து தப்பிக்க பார்த்திபன் சில வழிமுறைகளைக் கூறியுள்ளார். இது தொடர்பாக அவரது பதிவில் கூறியிருப்பதாவது, 'கரோனா வைரஸ் அதிகமாகப் பரவ தொடங்கியிருப்பதால் ஆயுர்வேதம், சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ள முன்னெச்சரிக்கைகள் மூலம் விஷ காய்ச்சலிலிருந்து நம்மை தற்காத்துக் கொள்வது எப்படி?' என்று குறிப்பிட்டுள்ளார்.