அண்மையில் நடிகர் மாதவனின் ஃபேன் மேட் போஸ்டர் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து இந்தியாவின் பணக்காரர்களில் ஒருவரான ரத்தன் டாடாவாக மாதவன் நடிப்பதாக வதந்திகள் வலம்வந்தன.
இதனையடுத்து ரசிகர் ஒருவர் ரத்தன் டாடாவின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் மாதவன் நடிப்பது உண்மையா என ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
இச்செய்தி உண்மையாக இருந்தால் அது பலருக்கு உத்வேகமாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த மாதவன், "துரதிருஷ்டவசமாக அது உண்மையல்ல. இது ரசிகர் ஒருவரின் விருப்பத்தால் வடிவமைக்கப்பட்ட போஸ்டராகும். இது குறித்து எந்த விதத்திலும் விவாதம் முன்னெடுக்கப்படவில்லை" எனத் தெரிவித்தார். இதன்மூலம் பல வதந்திகளுக்கு மாதவன் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதையும் படிங்க... சீனப் போரால் முடிவுக்கு வந்த ரத்தன் டாடாவின் காதல்!