தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'பேட் மேன்' பட இயக்குநருடன் கைகோர்க்கும் துல்கர் சல்மான்! - திரில்லர் படத்தில் நடிக்கும் துல்கர் சல்மான்

மும்பை: பாலிவுட் இயக்குநர் பால்கி இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய த்ரில்லர் படத்தில் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கவுள்ளார்.

dulquer
dulquer

By

Published : May 26, 2021, 8:33 PM IST

பாலிவுட் திரையுலகில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வலம் வருவர் பால்கி. இவர் கடைசியாக 2018ஆம் ஆண்டு அக்ஷய்குமார் நடிப்பில் வெளியான 'பேட் மேன்' (pad man) படத்தை இயக்கியிருந்தார். இதனைத் தொடர்ந்து பால்கி தனது புதிய படத்திற்கான கதை, திரைக்கதை எழுதும் பணியில் ஈடுபட்டு வந்தார். தற்போது அதனை முடித்துள்ள பால்கி, கரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பைத் தள்ளிவைத்துள்ளார்.

பால்கி இயக்கும் படங்களில் பொதுவாக பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றுவது வழக்கம். அதே போல் 'பேட் மேன்' படத்தை தவிர பிற அனைத்து பால்கி படங்களுக்கும் இளையராஜா இசையமைத்திருக்கிறார்.

இந்நிலையில், தற்போது பால்கி இயக்கும் அடுத்த படம் குறித்தான அப்டேட்டை பி.சி.ஸ்ரீராம் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், "பால்கி இயக்கத்தில் நான் ஒளிப்பதிவு செய்யும் அடுத்த படத்தில் துல்கர் சல்மான் நடிக்கிறார். த்ரில்லர் படமாக இது உருவாகவுள்ளது. படத்தின் பணிகளைத் தொடங்க ஆர்வமாக உள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

இந்தப் படத்தின் தயாரிப்பாளர், நடிகை, துணை கதாபாத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்தான எந்த விவரங்களையும் பி.சி.ஸ்ரீராம் குறிப்பிடப்படவில்லை. கரோனா அலை ஓய்ந்த பின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: மீண்டும் பாலிவுட்டில் கால்பதிக்கும் துல்கர் சல்மான்

ABOUT THE AUTHOR

...view details