தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

அனிருத் பிறந்தநாள்- மாஸ்டர் படக்குழு வெளிட்ட மாஸ் அப்டேட்! - மாஸ்டர் பாடல்கள்

சென்னை: ’மாஸ்டர்’ பட இசையமைப்பாளரின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்படக்குழு ’குவிட் பண்ணுடா’ பாடலை இன்று (அக்.16) வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

அனிருத்
அனிருத்

By

Published : Oct 16, 2020, 8:43 AM IST

நடிகர் விஜய், மாளவிகா மோகனன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம், ‘மாஸ்டர்’. கைதி பட புகழ் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இத்திரைப்படத்தை சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ளார். ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நடந்துமுடிந்த நிலையில், பொது ஊரடங்கு காரணமாக படம் வெளியாகும் தேதி ஒத்திவைக்கப்பட்டது.

இருப்பினும், விஜய் ரசிகர்கள் ’மாஸ்டர்’ பட அப்டேட்டை வெளியிடுமாறு தொடர்ந்து கோரிக்கை வைத்துவந்தனர். இந்நிலையில், இன்று (அக்.16) ’மாஸ்டர்’ பட இசையமைப்பாளரின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க முடிவு செய்துள்ளது.

ஆம்...மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள ’குவிட் பண்ணுடா’ லிரிக் வீடியோவை படக்குழு இன்று(அக்.15) மாலை 6 மணிக்கு வெளியிடவுள்ளது. நீண்ட நாள்களாக காத்திருந்த விஜய் ரசிகர்களுக்கு, இது ஒரு நல்ல விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு இப்படத்தில் இடம்பெற்றுள்ள ’வாத்தி கமிங்’ பாடல் வெளியானது. தற்போது யூ-டியூப் தளத்தில் அப்பாடல் எட்டு கோடி பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:ஓடிடி தளத்தில் வெளியான 'புத்தம் புது காலை' திரைப்படம்!

ABOUT THE AUTHOR

...view details