தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிங்கப்பூர் ஆசிய அகாடமி விருதை தட்டிச்சென்ற கவுதம் மேனின் 'குயின்' தொடர்! - கவுதம் மேனன்

கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் இயக்கத்தில் வெளியான குயின் தொடர், சிங்கப்பூர் ஆசிய அகாடமி விருதுகளின் சிறந்த இணையத் தொடருக்கான விருதினை வென்றுள்ளது.

குயின் தொடர்
குயின் தொடர்

By

Published : Dec 8, 2020, 11:00 PM IST

ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு கடந்த ஆண்டு எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் வெளியான இணையத் தொடர் குயின்.

இதனை கவுதம் மேனன், பிரசாத் முருகேசன் ஆகியோர் இணைந்து இயக்கியிருந்தனர்.

இதில் ஜெயலலிதாவின் குழந்தை பருவத்தை அனிகாவும், இளமை பருவத்தை அஞ்சனா ஜெயபிரகாசும், பின்பு அவரது அரசியல் பிரவேச காலத்தை ரம்யா கிருஷ்ணணும் நடித்திருந்தனர்.

ரசிகர்ளிடையே நல்ல வரவேற்றைப் பெற்ற இத்தொடர், நடப்பு ஆண்டு சிங்கப்பூர் ஆசிய அகாடமி விருதுகளின் சிறந்த இணையத் தொடருக்கான விருதினை வென்றுள்ளது.

இந்த உற்சாகமானச் செய்தியினை நடிகை ரம்யா கிருஷ்ணன் அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details