சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டதன் மூலம் பிரபலமடைந்தவர் நடிகை கண்டீல் பலோச். இவர் கடந்த 2016 ஜூலை 15ஆம் தேதி இரவு மூல்தானில் உள்ள அவரது இல்லத்தில் கழுத்து நெறிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்து கிடந்தார். இந்த சம்பவம் பாகிஸ்தான் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பலோச்சின் தந்தை தனது மகன் வாசீம் இந்த கொலையை செய்ததாக காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் கைதுசெய்து விசாரிக்கப்பட்ட வாசீம் கொலைக்குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து நீதிமன்றத்தில் வாக்குமூலம் அளித்த வாசீம், சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவிட்டு எங்கள் குடும்பத்துக்கு கண்டீல் பலோச் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டாள். அதனால்தான் அவளை கொலை செய்தேன் என தெரிவித்தார்.