தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'விமானம் தாமதமானால் இனி கவலையே வேண்டாம்: விரைவில் வருகிறது தியேட்டர்' - பிவிஆர்  நிறுவனம்

சென்னை: விமான நிலையத்தில், 5 திரைகள் கொண்ட திரையரங்கம் அமைக்க பிவிஆர்  நிறுவனம் முடிவு செய்துள்ளது.

சென்னை விமான நிலையத்திற்குள் வருகிறது 5 திரைகள் கொண்ட திரையரங்கம்
சென்னை விமான நிலையத்திற்குள் வருகிறது 5 திரைகள் கொண்ட திரையரங்கம்

By

Published : Jan 23, 2020, 9:59 AM IST

சென்னை விமான நிலையத்தில் சில சமயத்தில் நீங்கள் செல்ல வேண்டிய விமானம் தாமதம் ஆனாலோ அல்லது விமான நிலையத்தில் நீங்கள் யாரையாவது வரவேற்க செல்லும் போது, விமானம் தாமதமாக வந்தாலோ, இனிமேல் மணிக்கணக்கில் விமான நிலையத்தில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் விமான நிலையத்திலேயே இனிமேல் ஜாலியாக ஒரு சினிமா பார்த்துவிட்டு பொழுதைப் போக்கலாம்.

ஆம்.. சென்னை விமான நிலையத்துக்குள், பயணிகளுக்காக 5 திரைகள் கொண்ட திரையரங்கு, அமைக்க பிவிஆர் திரையரங்கம் முடிவு செய்துள்ளது.

அங்கு கார் பார்க்கிங், ஹோட்டல்கள், குளிர்பானக் கடைகள் போன்ற சர்வதேச வசதியுடன் கூடிய திரையரங்கம் அமைய உள்ளது. சுமார் 250 கோடி ரூபாய் செலவில் உருவாகவுள்ள இந்தத் திரையரங்கம் அடுத்த ஆண்டு (2021) கட்டிமுடிக்கப்படும் என்று சொல்லப்படுகிறது.

இனிமேல் விமானம் தாமதமாக வந்தால், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டுமே என்ற கவலேயே வேண்டாம். விமான நிலையத்தில் உள்ள திரையரங்கில் ஜாலியாக படம் பார்த்து என்ஜாய் செய்யலாம்.

இதையும் படிங்க: 'முக்காலா முக்காபுலா' பாடலுக்கு டிக்டாக் செய்த வருண் தவான்

ABOUT THE AUTHOR

...view details