சென்னை: தமிழ்நாட்டில் பிவிஆர் சினிமாஸ் வரும் 26ஆம் தேதி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கரோனா இரண்டாவது அலை காரணமாக திரையரங்குகள் கடந்த நான்கு மாதங்களாக மூடப்பட்டு இருந்தன. கரோனா படிப்படியாக கட்டுக்குள் வந்ததை அடுத்து முதலமைச்சர் ஸ்டாலின் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அறிவித்தார். அதில் 23ஆம் தேதி முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் திறக்கலாம் என அனுமதி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து நேற்று தமிழ்நாடு முழுவதும் திரையரங்குகள் திறக்கப்பட்டன. இருந்தபோதும் புதிய படங்கள் எதுவும் ரிலீஸ் ஆகாததால், பெரும்பாலான திரையரங்குகள் திறக்கப்படவில்லை. சென்னையில் ஏஜிஎஸ், கமலா, சங்கம் ஆகிய திரையரங்குகள் திறக்கப்பட்டன. வரும் வெள்ளி முதல் திரையரங்குகள் கூடுதலாக திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பிவிஆர் சினிமாஸ் தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி திரையரங்குகளை திறக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் வரும் 26ஆம் தேதி முதல் திரையரங்குகள் திறக்கப்படும். 100 சதவீதம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பணியாளர்களை கொண்டு திரையரங்குகள் இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.
பிவிஆர் சினிமாஸ் 26ஆம் தேதி திறக்கப்படும்! - பிவிஆர் சினிமாஸ்
சென்னையில் உள்ள 13 இடங்களில் 83 திரையரங்குகளும், கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பிவிஆரின் திரையரங்குகளும் திறக்கப்பட உள்ளன.
pvr cinemas open on august 26
சென்னையில் உள்ள 13 இடங்களில் 83 திரையரங்குகளும், கோயம்புத்தூர் மற்றும் வேலூர் ஆகிய இடங்களில் உள்ள பிவிஆரின் திரையரங்குகளும் திறக்கப்பட உள்ளன.
இதையும் படிங்க:10 ஆண்டு காதலியைக் கரம்பிடிக்கும் 'வலிமை' வில்லன்