தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'புழல்' பட நடிகர் மனோ விபத்தில் உயிரிழப்பு - சன் டிவி தொகுப்பாளர் மனோ

சென்னை: புழல் திரைப்படத்தின் நடிகர் மனோ கார் விபத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

puzhal-movie-actor-mano

By

Published : Oct 29, 2019, 11:32 AM IST

சென்னை ஆவடியைச் சேர்ந்தவர் மனோ(37). இவர், சன் டிவியில் தொகுப்பாளராகவும், மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனக் கலைஞராகவும் அறிமுகமாகி பிரபலமானவர். தொடர்ந்து 2010ல் வெளியான 'புழல்' என்ற திரைப்படத்தில் மூன்று நடிகர்களில் ஒருவராக அறிமுகமானார்.

மேலும் 'சும்மாவே ஆடுவோம்', ' திருட்டு விசிடி' உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். பல்வேறு படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி வந்த இவர், தமிழ்நாடு முழுவதும் மேடை நிகழ்ச்சிகளை நடத்திவந்தார் .

புழல் திரைப்பட நடிகர் மனோ

இதனிடையே, நேற்று மாலை தனது மனைவி லிவியாவுடன் அம்பத்தூரில் இருந்து ஆவடிக்கு காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென சென்டர் மீடியனில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் மனோ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதில் பலத்த காயமடைந்த அவருடைய மனைவி லிவியா தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். இந்த தம்பதிக்கு ஏழு வயதில் ஒரு மகள் உள்ளார்.

தொகுப்பாளராக சின்னத்திரையில் அறிமுகமான நடிகர் மனோ

சாலை விபத்தில் உயிரிழந்த மனோ, வரும் ஜனவரி மாதத்தில் கலக்கப்போவது யாரு 9ஆவது சீசனில் தொகுப்பாளராக உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், இதற்காக அவர் பயிற்சி பெற்றுவந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க...

'துயரக்குழியில் விழுந்துவிட்டோம்' - நடிகர் விவேக் உருக்கம்!

ABOUT THE AUTHOR

...view details