தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

புது ஆந்தாலஜி படம் ரெடி: ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா? - புத்தம் புது காலை விடியாதா

'புத்தம் புது காலை விடியாதா' ஆந்தாலஜி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Putham Pudhu Kaalai Vidiyaadhaa
Putham Pudhu Kaalai Vidiyaadhaa

By

Published : Jan 4, 2022, 4:24 PM IST

ஓடிடி தளங்கள் அதிகமான பிறகு ஆந்தாலஜி படங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதன்படி 2020ஆம் ஆண்டு அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் புத்தம் புது காலை.

ஐந்து இயக்குநர்கள், ஐந்து வித்தியாசமான கதைகளாக இயக்கிய இப்படம் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது புதிய ஆந்தாலஜி திரைப்படம் உருவாகியுள்ளது.

'புத்தம் புது காலை விடியாதா' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை இயக்குநர்கள் பாலாஜி மோகன், ரிச்சார்ட் ஆன்டனி, மதுமிதா, ஹலிதா ஷமீம், சூரிய கிருஷ்ணா ஆகியோர் ஐந்து வெவ்வேறு படங்களை இயக்கியுள்ளனர்.

இதில் நதியா, அர்ஜுன் தாஸ், ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, லிஜோமோல் ஜோஸ், கௌரி கிஷன், விஜி சந்திரசேகரன், டிஜே அருணாச்சலம், மணிகண்டன், அன்பு தாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. காதல் சார்ந்த படமாக இது உருவாகியுள்ளதுபோல் தெரிகிறது. பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வரும் 14ஆம் தேதி இப்படம் அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

இதையும் படிங்க:Valimai release: வலிமை ரிலீஸ் தேதி எப்போது?

ABOUT THE AUTHOR

...view details