'அலா வைகுந்தபுரமுலோ' படத்திற்குப் பிறகு அல்லு அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'புஷ்பா'. 'ரங்கஸ்தலம்' பட இயக்குநர் சுகுமார் இயக்கியுள்ள இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. புஷ்பா படத்தில் பன்வார் சிங் ஷெகாவத் (ஐபிஎஸ்) கதாபாத்திரத்தில் மொட்டைத் தலையுடன் ஆக்ரோஷமாக ஃபகத் பாசில் நடித்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் நிறைவடைந்துள்ள நிலையில் வரும் டிசம்பர் 6ஆம் தேதி ட்ரெய்லர் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது. மேலும் டிசம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகுமார் இயக்கிய 'ரங்கஸ்தலம்' திரைப்படம் மாபெரும் வரவேற்புப் பெற்றதால், 'புஷ்பா' படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
இதையும் படிங்க:புஷ்பா அப்டேட்: ஆக்ரோஷத்துடன் மோதும் 'புஷ்பா' ராஜ் 'பன்வார் சிங் ஷேகாவாத்'