தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

5 மொழிகளில் ஓடிடியில் வெளியான புஷ்பா - அல்லு அர்ஜுன் புஷ்பா படம்

நடிகர் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்படம் ஐந்து மொழிகளில் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

புஷ்பா
புஷ்பா

By

Published : Jan 8, 2022, 4:16 PM IST

நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் டிசம்பர் 17ஆம் தேதி வெளியான திரைப்படம் புஷ்பா. இதில் ஃபகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர்.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியான இப்படம் சுமார் 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூல்செய்து சாதனை படைத்துள்ளது.

திரையரங்குகளில் படம் வெளியான நிலையில் டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமையை அமேசான் ஃபிரைம் நிறுவனம் 22 கோடி ரூபாய் கொடுத்துக் கைப்பற்றியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் படம் வெளியாகி 22 நாள்களான நிலையில் புஷ்பா அமேசான் ஃபிரைம் ஓடிடி தளத்தில் நேற்றிரவு (ஜனவரி 7) வெளியானது. இந்தி தவிர மற்ற நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி படத்தில் இடம்பெற்றுள்ள 'ஊ சொல்றியா' பாடல் காணொலியை வெளியாகி சமூக வலைதளங்களில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

இதையும் படிங்க: யாஷ் பிறந்தநாள் - போஸ்டருடன் கே.ஜி.எஃப். 2 ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியீடு

ABOUT THE AUTHOR

...view details