தெலுங்கு முன்னணி நடிகர் அல்லு அர்ஜூனின் 'புஷ்பா: தி ரைஸ்' திரைப்படமானது, வருகின்ற டிசம்பர் 17ஆம் தேதி வெளியாகவுள்ளது.
அல்லு அர்ஜூனின் சினிமா பயணத்திலேயே இதுவரையிலும் 'புஷ்பா' தான் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட திரைப்படமாகும்.
இரண்டு பாகமாக வெளியாகவுள்ள இத்திரைப்படத்திற்கு 'மைத்ரி மூவி மேக்கர்ஸ்' அதிக பொருட்செலவை செய்துள்ளனர்.
சுகுமார் இயக்கத்தில் வெளியான 'அலா வைகுந்தபுரமுலு' மற்றும் 'ரங்கஸ்தலம்' ஆகியத் திரைப்படங்கள் தெலுங்கு மொழியில் மட்டுமல்லாது மற்றமொழிகளிலும் வெற்றியைக் குவித்தன.
தற்போது சுகுமார் இயக்கத்தில் 'புஷ்பா: தி ரைஸ்' வெளியாகவுள்ளது.
அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் கூடிக்கொண்டே வருகிறது.
இப்படத்திற்கு அனைத்து மொழிகளிகளின் டிஜிட்டல் ஸ்ட்ரீமிங் உரிமையை அதிக விலைக்கு ஒரு முன்னணி ஓடிடி தளம் வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் வெளியான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் ட்ரெய்லர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி வருமானத்தை ஈட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இத்திரைப்படமானது சர்வதேச அளவில் வெளியிடப்படவுள்ளதால் உலகளாவிய பாக்ஸ் ஆஃபிஸில் தடம் பதிக்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க:நடிகைக்கு முன் மருத்துவர் அவதாரம்; கலக்கும் ஷங்கர் மகள்!