நடிகர் ஃபஹத் ஃபாசில் நடிப்பில், மலையாளத்தில் உருவாகியுள்ள திரைப்படம், 'மாலிக்'. இதில் 'தி கிரேட் இந்தியன் கிச்சன்' படத்தில் நடித்த நிமிஷா சஜயன் நடித்துள்ளார். இப்படத்தை மகேஷ் நாராயணன் இயக்கியுள்ளார்.
மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகியுள்ள இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால், கேரளாவில் திரையரங்குகள் இன்னும் திறக்காததால் இப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு சமீபத்தில் தெரிவித்திருந்தது.