புதுச்சேரி அரசின் செய்தி விளம்பரத்துறை நவதர்ஷன் திரைப்படக் கழகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் இந்திய திரைப்பட விழா நடத்தப்படுவது வழக்கம். அதேபோன்று 2018ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படத்திற்கு விருது வழங்கும் விழா புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முருகா திரையரங்கில் 13ஆம் தேதி (நேற்று) முதல் 16ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பரியேறும் பெருமாள் இயக்குநருக்கு கிடைத்த மற்றொரு அங்கீகாரம்! - பரியேறும் பெருமாள் படத்திற்கு விருது
புதுச்சேரி: அரசு சார்பில் சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட 'பரியேறும் பெருமாள்' பட இயக்குநர் மாரி செல்வராஜுக்கு ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ விருது வழங்கப்பட்டது.
maari selvaraj
இந்நிலையில், 2018ஆம் ஆண்டு மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான 'பரியேறும் பெருமாள்' திரைப்படம் சிறந்த தமிழ் மொழி படமாகத் தேர்வானது. இந்த விழாவில் சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி பங்கேற்று இயக்குநர் மாரி செல்வராஜுக்கு, ‘சங்கரதாஸ் சுவாமிகள்’ விருதும் ஒரு லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மாரி செல்வராஜ், புதுச்சேரி அரசு தன்னை பெருமைப்படுத்தியதற்கு நன்றி என்றும், இது தனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனவும் தெரிவித்தார்.