தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

#PsychoTeaserRelease சைக்கலாஜிக்கல் த்ரில்லரில் கலக்கவரும் 'சைக்கோ' டீசர் ரிலீஸ் - ஒளிப்பதிவாளர் பி. சி. ஸ்ரீராம்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் நடிக்கும் `சைக்கோ' திரைப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

psycho movie teaser

By

Published : Oct 25, 2019, 4:54 PM IST

Updated : Oct 25, 2019, 5:10 PM IST

உதயநிதி ஸ்டாலின், நித்யா மேனன், அதிதி ராவ், இயக்குநர் ராம் நடிப்பில் இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் 'சைக்கோ' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடந்துமுடிந்தது. இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

முன்பு ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆனால் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவரின் துணை ஒளிப்பதிவாளரான தன்வீர் மிர்ரை இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்யச்சொல்லியுள்ளார். படத்தின் டைட்டில் கார்டிலும் அவர் பெயரையே போடச்சொல்லி பரிந்துரை செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

சைக்கோ

சைக்கலாஜிக்கல் த்ரில்லர் ஜானரில் வெளிவரும் இப்படம் த்ரில்லர் கதைகள் பிடிக்கும் அனைத்து ரசிகர்களுக்கும் பெரும் விருந்தாக இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்தை டபுள் மீனிங் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது.

இதையும் படிங்க: தெலுங்கில் உருவாகும் தனுஷின் அசுரன் - ஹீரோ யார் தெரியுமா?

Last Updated : Oct 25, 2019, 5:10 PM IST

ABOUT THE AUTHOR

...view details