சென்னை:தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் ‘சைமா 2020’ 9ஆவது பதிப்பு செப்டம்பர் 18, 19 ஆகிய தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறுகிறது. இதில், மிஸ்கின் இயக்கிய ‘சைக்கோ’ திரைப்படம் 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
சிறந்த இயக்கம் - மிஷ்கின், முன்னணி கதாபாத்திரத்தில் சிறந்த நடிகர் - உதயநிதி ஸ்டாலின், சிறந்த இசை - இளையராஜா, சிறந்த பாடல் - உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் - உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் (டபுள் மீனிங் ப்ரொடக்ஷன்), சிறந்த ஒளிப்பதிவு - தன்வீர் மிர், சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் ராஜ்குமார் பிச்சுமணி பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.
9 விருதுகளுக்கு பரிந்துரை
இது குறித்து தாயாரிப்பாளர் அருண்மொழி மாணிக்கம் கூறியதாவது, “தனது தயாரிப்பில் கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘சைக்கோ’ திரைப்படம், தற்போது 9 விருதுகளுக்கு பரிந்துரையாகி மிகப்பெரும் அங்கீகாரத்தை பெற்றுள்ளது.