தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

முன்னணி இயக்குனர்கள் வெளியிட உள்ள ஃபர்ஸ்ட் லுக்! - கோலிவுட் செய்திகள்

திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் 21ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை பிரபல இயக்குநர்களால் வெளியிடப்பட உள்ளது.

திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் 21ஆவது படம்
திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட் தயாரிப்பு நிறுவனத்தின் 21ஆவது படம்

By

Published : Dec 31, 2020, 2:22 PM IST

மாயவன், கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ் திரைப்படங்களை இயக்கியவரும், பிரபல தயாரிப்பாளருமான சிவி குமாரின் தயாரிப்பு நிறுவனம் ’திருக்குமரன் எண்டெர்டெய்ன்மெண்ட்’.

இந்நிறுவனம் தயாரிக்கும் 21ஆவது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அறிவிப்பு, புத்தாண்டு தினமான நாளை (ஜன.01) வெளியாகும் எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் நடிகர்கள் தேர்வு குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக், பிரபல இயக்குனர்களான ரஞ்சித், கார்த்திக் சுப்பாராஜ், ராம் குமார் ஆகியோரால் நாளை வெளியிடப்பட உள்ளது.

ABOUT THE AUTHOR

...view details