தமிழ்நாட்டில் 4 மாதங்களுக்கு பிறகு நேற்று (ஆகஸ்ட் 23) திரையரங்குகள் திறக்கப்பட்டன. இதற்கு நன்றி தெரிவித்தும், கேளிக்கை வரியை குறைக்க வேண்டும் எனவும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில், "கரோனா பேரிடர் காலங்களில் திரைத்துறை தொழிலாளர்களின் வாழ்க்கையைக் கருத்தில் கொண்டு, அவர்களின் வலிகளையும், வேதனையையும் உணர்ந்து திரையரங்குகளை திறப்பதற்கு அனுமதி அளித்த முதலமைச்சருக்கு தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறது.