தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

லிங்குசாமி படத்தை கிளாப் அடித்து தொடங்கி வைத்த தயாரிப்பாளர்! - தெலுங்கில் படம் இயக்கும் லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி, தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை ஹீரோவாக வைத்து இயக்கும் புதிய படத்தை தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

lingusamy
lingusamy

By

Published : Jul 13, 2021, 1:32 PM IST

இயக்குநர் லிங்குசாமி 'சண்டைக்கோழி 2' படத்தைத் தொடர்ந்து வேறு எந்தப் படமும் இயக்காமல் இருந்து வந்தார். இந்த நிலையில், தற்போது தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனியை வைத்து புதிய படத்தை இயக்க உள்ளார்.

இப்படத்தில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை கீர்த்தி ஷெட்டி நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்திற்கு '#RAPO19' என தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. சுஜித் வாசுதேவ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு அன்பறிவ் சண்டை இயக்குநராகப் பயணியாற்றவுள்ளார்.

ஸ்ரீனிவாசா சிட்டூரி தயாரிக்கும் இப்படம் தெலுங்கு, தமிழ் என இரு மொழிகளில் வெளியாகிறது. இப்படத்தின் தமிழ்நாடு உரிமையை ‘MasterPiece’ நிறுவனம் பெற்றுள்ளது.

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் '#RAPO19' படம் குறித்தான அறிவிப்பு வெளியான நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று (ஜூலை.12) இப்படத்தின் படப்பிடிப்பை தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் (திருப்பதி பிரதர்ஸ்) கிளாப் அடித்து தொடங்கி வைத்தார்.

இதையும் படிங்க: '1000 முத்தங்கள் லிங்கு' - கன்னத்தை நனைத்த எச்சிலாய் வசந்தபாலனின் கவிதை

ABOUT THE AUTHOR

...view details