கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாறன்'. இப்படத்தில் தனுஷ் ஒரு பத்திரிகையாளராக நடித்துள்ளார். மாளவிகா மோகனன் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. இயக்குநர் அமீர் முக்கியக் கதாபாத்திரத்திலும்; சமுத்திரக்கனி, ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன், ஜெயப்பிரகாஷ் உள்ளிட்டோரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மாறனை கண்டுகொள்ளாத தனுஷ்
இத்திரைப்படம் வரும் வெள்ளியன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் படத்தின் ப்ரோமோஷன் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. ஆனால், தனுஷ் மட்டும் இப்படம் குறித்து கண்டுகொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. 'மாறன்' படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டும் என்று தனுஷ் ஆசைப்பட்டுள்ளார். ஆனால், தயாரிப்பாளர் தரப்பு படத்தை ஓடிடி-யில் நல்ல விலைக்கு விற்றுவிட்டதால், தனுஷ் கடுப்பாகியுள்ளதாகவும் இதனால் தான் 'மாறன்' ப்ரோமோஷன் குறித்து அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் திரையுலகத்தில் பலரால் பேசப்படுகிறது.