தமிழ் சினிமாவில் மிகவும் முக்கிய தயாரிப்பாளர்களில் ஒருவர் கலைப்புலி எஸ். தாணு. இவர் 25 ஆண்டுகளுக்கு முன்னர் மோகன்லால், பிரபு நடிப்பில் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவான ’சிறைச்சாலை’ என்ற பிரமாண்டமான படைப்பை தமிழில் வெளியிட்டார்.
தற்போது மீண்டும் தாணு, இதே கூட்டணியில் உருவான ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படத்தை தமிழில் ரிலீஸ் செய்கிறார்.
இப்படம் குறித்து இயக்குநர் பிரியதர்ஷன் பேசுகையில், "11ஆம் நூற்றாண்டில் வாழ்ந்து வெள்ளையர்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கிய ஜாமோரின் கடற்படைத் தலைவர் குஞ்ஞாலி மரைக்காயரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. 100கோடி ரூபாய் பொருள்செலவில் தயாராகியுள்ள இப்படம் கண்டிப்பாக ரசிகர்களைக் கவரும் என நம்புகிறேன்" என்று கூறியுள்ளார்.