தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல' - சுரேஷ் காமாட்சி ட்வீட்! - சிம்புவுக்கு நன்றி சொன்ன சுரேஷ் காமாட்சி

வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல என மாநாடு படத்தின் 50ஆவது நாள் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ட்வீட்டரில் பதிவிட்டுள்ளார்.

சுரேஷ் காமாட்சி ட்விட்
சுரேஷ் காமாட்சி ட்விட்

By

Published : Jan 13, 2022, 1:59 PM IST

மாநாடு படத்தின் 50ஆவது நாள் வெற்றியை முன்னிட்டு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நன்றியை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தொடக்கம் எப்படியானதாக இருந்தாலும் , முடிவை சிறப்பானதாக்கிவிட வேண்டும்.

மாநாடு படத்தின் தொடக்கம் முதல் வெளியீடுவரை இருந்த எல்லா தடங்கல்களையும் அடித்து நொறுக்கிவிட்டு இன்றோடு ஐம்பதாவது நாள் என்ற அழகிய நிறைவை எட்டியுள்ளது. நிச்சயம் 100 நாள்கள் சுவரொட்டி ஒட்டியே ஆக வேண்டும் என எனது எதிர்பார்ப்பு உள்ளது. 50 நாள்கள் இந்தச் சிக்கலான காலகட்டத்தில் படம் திரையரங்கில் ஓடுவது மிக சவாலானது.

சுரேஷ் காமாட்சி ட்வீட்

இந்த 50 நாள்கள், 100 நாள்களுக்கு இணையானது. இடையில் புதுப்படங்கள் வந்து போனாலும் மாநாடு தன் இடத்தைத் தக்க வைத்துக்கொண்டான். வெற்றி என்பது நமக்கு நாமே கூவிக் கொள்வதல்ல. வெற்றி தன்னைத் தானே அறிவித்துக் கொள்ளும் என்பதாக இந்த வெற்றி தன்னை அறிவித்துக் கொண்டுள்ளது.

இதற்கு காரணமான நாயகன் சிலம்பரசன், இயக்குநர் வெங்கட் பிரபு, ஃபைனான்சியர் உத்தம் சந்த்துக்கு நன்றி. இக்கட்டான நேரத்தில் இரவு, பகல் பாராமல் உடன் நின்று படம் வெளியாக உறுதுணையாக நின்ற அனைவருக்கும், என் தாய், தந்தைக்கும் இவ்வெற்றியை சமர்ப்பித்து மகிழ்கிறேன். நன்றி! நன்றி! நன்றி!" எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:பீஸ்ட் ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவு

ABOUT THE AUTHOR

...view details