தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சிம்பு ரசிகர்களால் நெகிழ்ந்துபோன மாநாடு படத் தயாரிப்பாளர்! - சுரேஷ் காமாட்சி

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறிய சிம்பு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மாநாடு
மாநாடு

By

Published : Aug 20, 2020, 3:06 PM IST

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் திரைப்படம் 'மாநாடு'. இத்திரைப்படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுவந்த நிலையில், ஊரடங்கு காரணமாகத் தற்காலிகமாகப் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில் நேற்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். இதையொட்டி அவருக்குத் திரையுலகினர் மட்டுமின்றி சிம்பு ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர்.

இதனால் மனம் நெகிழ்ந்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "அன்பின்‌ சிம்புவுக்கும்‌... அவரது வெறித்தனமான ரசிகர்களுக்கும்‌ மனத்தின்‌ ஆழத்திலிருந்து நன்றிகள்‌. ’மாநாடு’ படத்தை சிலம்பரசன்‌ என்ற ஒரு சகோதரனோடுதான்‌ தொடங்கினேன்‌.

ஆனால்‌ இன்று அவர்‌ எனக்குப்‌ பரிசளித்திருப்பதோ பல லட்சக்கணக்கான சகோதரர்களை. அத்தனை பேருக்கும்‌ மனப்பூர்வ நன்றிகள்‌. நன்றி மட்டும்‌ போதாது. ’மாநாடு’ நம்‌ ஒவ்வொருவருக்கும்‌ எவ்வளவு முக்கியம்‌ என்பதை அறிவேன்‌.

எத்தனை தடைகள்‌ வந்தாலும்‌ கடந்து மாநாட்டை வெற்றிப்படமாகத்‌ தருவதே, நான்‌ பதில்‌ செய்யும்‌ நன்றியாக இருக்க முடியும்‌, அதைச் செய்வோம்‌.

இணைந்தே வெல்வோம்‌. மிகப்பெரிய நம்பிக்கையை ஒரு தயாரிப்பாளனான எனக்கு ஏற்படுத்தியுள்ளீர்கள்‌. இந்த டானிக்கை அருந்திய பலத்தோடு எதிர்‌ வரும்‌ நாள்களை அர்த்தமுள்ளதாக்கிக்‌ கொள்கிறேன்‌. நன்றி நன்றி" என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details