தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'தஞ்சாவூர் குறித்து சர்ச்சை பேச்சு; வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும்' - தயாரிப்பாளர் சொ. சிவக்குமார் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

தஞ்சாவூர் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்கு வனிதா கண்டிப்பாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.

சிவகுமார்
சிவகுமார்

By

Published : Jul 25, 2020, 8:09 PM IST

நடிகை வனிதா விஜயகுமாரின் திருமணம் குறித்து பலரும் விமர்சித்துவருகின்றனர். இதற்கிடையே, சமீபத்தில் வனிதா கலந்துகொண்ட பேட்டி ஒன்றில், ”தஞ்சாவூரில் இருக்கும் பெரும்பாலான ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பார்கள், அங்கு இது சாதாரண விஷயமாகவே எடுத்துக் கொள்ளப்படும்” என்று கூறினார்.

இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ’ஆடவர்’ திரைப்படத்தின் தயாரிப்பாளரும், மக்கள் செயல் பேரவை தலைவருமான சொ. சிவக்குமார், வனிதா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சொ. சிவக்குமார் கூறுகையில், “தஞ்சாவூர் என்பது உலகளவில் வரலாறு நிறைந்த கலாசார பின்னணி கொண்ட நகரம். சமூக அக்கறையைப் பின்பற்றி வாழக்கூடிய எங்கள் தஞ்சை மக்களைப் பற்றி எதுவுமே தெரியாமல், எங்கள் மக்களை அவமானப்படுத்தக்கூடிய வகையில், எல்லோரும் இரண்டு மனைவிகள் கட்டுவார்கள், அங்கு போய் பார்த்தாலே தெரியும் என்று ஊடகத்தில் பேட்டி கொடுத்திருக்கும் வனிதா தஞ்சாவூர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.

இதுபோன்று தவறான செய்திகளைச் சொல்லக்கூடாது. கண்டிப்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவருக்கு எதிராகப் போராட்டம் நடத்தப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details