தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

’பல கோடி நெஞ்சங்களில் நிலைத்துவிட்டார்’- விஜய் ஆண்டனியை பாராட்டிய பிரபல தயாரிப்பாளர்

சென்னை: லிப்ரா புரடக்ஷன் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர், விஜய் ஆண்டனியை பாராட்டி செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளார்.

ரவீந்தர் சந்திரசேகர்
ரவீந்தர் சந்திரசேகர்

By

Published : May 6, 2020, 1:19 AM IST

ஊரடங்கு காரணமாக அனைத்து துறைகளும் நஷ்டமடைந்துள்ளன. அதிலும் குறிப்பாக சினிமா படப்பிடிப்பு நிறுத்தப்படுள்ளதால், தினக்கூலி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். ஊரடங்கு முடுவுக்கு வந்தாலும், திரைப்டங்கள் தயாரிக்க இன்னும் மூன்று மாதங்கள் தேவைப்படும் என்பதால், தயாரிப்பாளர்கள் பலரும் மிகுந்த மனவேதனையில் உள்ளனர்.

இந்நிலையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது தான் ஒப்பந்தமாகியுள்ள மூன்று படங்களின் சம்பளத்திலிருந்து 25 சதவீதம் குறைத்துக்கொள்வதாகத் தெரிவித்துள்ளார். இவரின் இந்த செயலை பலரும் பாராட்டியுள்ளனர்.

அந்தவகையில் விஜய் ஆண்டனியின், செயலை பாராட்டி தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் செய்தி குறிப்பு ஒன்று வெளியிட்டுள்ளார். அதில், “இன்றைய கஷ்டமான சூழ்நிலையில் குடும்பங்கள் சில நேரம் மகிழ்ந்திருக்க காரணம் சினிமா. அதனால் தான் அனைத்து முன்னணி சேனல்களும் 24 மணி நேர சினிமா சேனல்களாக மாறிவிட்டன. இப்படி மக்களை மகிழ்விக்கும் சினிமாக்களை கோடிகள் வாரி இறைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரின் நிலை எப்போதுமே கேள்விகுறி தான்.

இந்த நீண்ட லாக் டவுனுக்குப் பிறகு அனைத்து துறைகளும் செயல்பட ஆரம்பிக்கும் நடிகர், நடிகைகள், டெக்னிசியன்களுக்கு வேலையும், சம்பளமும் கிடைத்துவிடும். ஆனால் பைனான்ஸ் வாங்கி லாக்டவுனினால் நின்று போயிருக்கும், படங்களின் தயாரிப்பாளர்கள் நிலைமை பரிதாபதக்குரியது தான்.

ரவீந்தர் சந்திரசேகர் வெளியிட்ட செய்தி குறிப்பு

இதற்கு ஒரு முற்றுபுள்ளி வராதா, என யோசித்துக்கொண்டிருக்கும் போது விஜய் ஆண்டனி தாமாகவே முன்வந்து தனது சம்பளத்தில் 25% வேண்டாம் என அறிவித்தது, அவர் நடித்துகொண்டு இருக்கும் தயாரிப்பாளர்கள் நெஞ்சில் பாலை வார்த்துள்ளது. இதன்மூலம் சில கோடிகளை அவர் இழக்கலாம், ஆனால் பல கோடி நெஞ்சங்களில் நிலைத்துவிட்டார். இவரைபோல் மற்ற அனைத்து நடிகர், நடிகைகள், டெக்னிசியன்கள் சம்பளத்தை குறைத்து பாரத்தை தயாரிப்பாளருடன் தோளில் சுமந்து செல்ல தயாராக இருந்தால் எந்த இடர் வரினும் தமிழ்சினிமா வீழாது, பீனிக்ஸ் போல எழுந்து நிற்கும்.

இது நாம் ஒன்றினையும் நேரம் , எங்களுக்காக தோள் கொடுத்திருக்கும் விஜய் ஆண்டனி அவர்களுக்கு அனைத்து தயாரிப்பாளர்களின் சார்பில் ஒரு பெரும் நன்றியை தெரிவித்துகொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:ராகவா லாரன்ஸ் வீட்டு முன்பு குவிந்த 20 நபர்கள்; நடந்தது என்ன?

ABOUT THE AUTHOR

...view details