பிரபல தமிழ் பட தயாரிப்பாளராக திகழ்ந்த எம். முத்துராமன் இன்று (ஜன.11) காலமானார். இவர் ராஜவேல் பிக்சர்ஸ் என்னும் பட தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி பிரபல நடிகர்களான நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ரஜினிகாந்த், போன்ற பல பிரபலங்களை வைத்து வெற்றி படங்கள் தயாரித்துள்ளார்.
இவரது தயாரிப்பில் நடிகர்களான ரவிச்சந்திரன், ஜெமினி கணேசன், சோ, வெண்ணிற ஆடை நிர்மலா, மனோரமா ஆகியோர் இணைந்து நடித்த ”பேரப்பிள்ளை” படம் ரசிகர் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ராஜமரியாதை, மூடுமந்திரம், நலந்தானா, ஆயிரம் ஜென்மங்கள் போன்ற பல படங்களை எம்.முத்துராமன் தயாரித்திருக்கிறார்.