ராஜன் மலைச்சாமி இயக்கத்தில் அஸ்மிதா, மவுனிகா ரெட்டி, பந்தா பாண்டி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பூதமங்கலம் போஸ்ட். இப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் தயாரிப்பாளர் கே.ராஜன், இயக்குநர் பாக்யராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன், “தமிழ்நாடு அரசு காலில் விழுந்து கேட்கிறேன். தயவுசெய்து டாஸ்மாக் கடைகளை மூடிவிடுங்கள். 30 ஆயிரம் கோடி வருமானத்திற்காக வேறு வழியை பாருங்கள். தாலிக்கு தங்கம் கொடுத்து, விட்டு தாலியை அறுக்காதீர்கள்.