மலையாளத் திரையுலகின் வெற்றிக்கூட்டணியாக கருதப்படும் இயக்குநர் ப்ரியதர்ஷன் - நடிகர் மோகன்லால் ஆகியோர் நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' (Maraikayar Arabikadalin Singam) படத்தின் மூலம் இணைந்துள்ளனர்.
கேரளாவிலுள்ள கோழிக்கோட்டில் 17ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கீசியர்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய இஸ்லாமிய மன்னனின் வரலாற்றை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது.
'மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்' (Maraikayar Arabikadalin Singam) படத்திற்கு திரு ஒளிப்பதிவு செய்ய ரோனி ரபேல் இசையமைத்துள்ளார். இப்படத்திற்கு இயக்குநர் ப்ரியதர்ஷன் மற்றும் இயக்குநர் ஐ.வி. சசி ஆகியோர் இணைந்து திரைக்கதை எழுதியுள்ளனர். ஆசீர்வாத் சினிமா சார்பில் ஆண்டனி பெரும்பாவூர் தயாரித்துள்ளார்.
படத்தில் மோகன்லாலுடன், நடிகர்கள் பிரபு, அர்ஜூன், இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, பிரனவ் மோகன்லால், கீர்த்தி சுரேஷ், கல்யாணி ப்ரியதர்ஷன், மஞ்சு வாரியர், சுஹாசினி, அசோக் செல்வன், இன்னோசன்ட் எனப் பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.