வேல்ஸ் பிலிம் இண்டர் நேஷனல் சார்பில் தயாரிப்பாளர் ஐசரி கணஷ் தயாரித்துள்ள படம்'குட்டி ஸ்டோரி'. ஆந்தாலஜி வகைமாதிரியான இப்படத்தை இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட்பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி ஆகியோர் இயக்கியுள்ளனர். படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்கில் வெளியாகவுள்ளது. தமிழில் முதன் முறையாக நான்கு இயக்குநர்கள் இயக்கிய ஆந்தாலஜி வகை திரைப்படம் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இதற்கான பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைப்பெற்றது. இதில் இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனன், வெங்கட் பிரபு, ஏ.எல் விஜய், நலன் குமாரசாமி, தயாரிப்பாளர் ஐசரி கணஷ் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
'குட்டி ஸ்டோரி' கான்செப்ட் கேட்டதும் பிடித்து விட்டது - ஐசரி கணஷ் - குட்டி ஸ்டோரி
சென்னை: பெரிய படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் ஆந்தாலஜி படமான 'குட்டி ஸ்டோரி' உருவாகியுள்ளதாக தயாரிப்பாளர் ஐசரி கணஷ் தெரிவித்துள்ளார்.
ishari
நிகழ்ச்சியில் பேசிய தயாரிப்பாளர் ஐசரி கணஷ் பேசுகையில், 'நீண்ட இடைவேளைக்கு பிறகு பத்திரிக்கையாளர்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த படத்தின் கான்செப்ட்டை என்னிடம் சொன்னவுடன் அது எனக்கு பிடித்துவிட்டது; உடனே ஒப்புக்கொண்டேன். நான்கு பெரிய இயக்குநர்கள் இணைந்து இதை உருவாக்க உள்ளனர் என்றதே இந்த படத்தின் மீதான ஈர்ப்பை அதிகப்படுத்தியது. பெரிய படங்களுக்கு இணையான பட்ஜெட்டில் இப்படம் தயாராகியுள்ளது என்றார்.