நடிகர் விஷ்ணு விஷால், கருணாகரன், மியா ஜார்ஜ் ஆகியோர் நடிப்பில் கடத்த 2015ஆம் ஆண்டு வெளியன் திரைப்படம் 'இன்று நேற்று நாளை'. இயக்குநர் ஆர்.ரவிக்குமார் இயக்கியுள்ள இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
டைம் ட்ராவல் வழியாக விஷ்ணு விஷால், கருணாகரன் கடந்த காலத்திற்கு செல்கின்றனர். அங்கு ஏற்பட்ட சில பிரச்னைகளை அவர்கள் எவ்வாறு சமாளித்து தங்களது பழைய வாழ்க்கைக்கு திரும்புகிறார்கள் என்பதே படத்தின் கதையாகும். இதையடுத்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக கடந்த ஜுலை மாதம், இயக்குநர் ஆர்.ரவிக்குமார் தெரிவித்தார்.
இதில் விஷ்ணு விஷால், கருணாகரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இயக்குநர் ரவிக்குமார் கதைஎழுத, அவரின் அசோசியேட் கார்த்திக் இப்படத்தை இயக்கவுள்ளதாக தயாரிப்பாளர் சி.வி.குமார் கூறியுள்ளார். மேலும் இதில் ஹிப் ஹாப் தமிழாவுக்கு பதிலாக ஜிப்ரான் இசையமைக்கவுள்ளார்.
இந்நிலையில், "இன்று நேற்று நாளை 2” படத்தின் ஸ்கிரிப்ட் எங்களிடம் வந்துள்ளது. இக்கதை மிகவும் சிக்கலான ஒன்றாகவும், ஆர்.ரவிக்குமார் அயலான் படத்தை இயக்கும் பணிகளில் பிஸியாகவுள்ளதாலும் இப்படத்தின் வேலைகள் தாமதமாகியுள்ளன. ஸ்கிரிப்ட் நன்றாக வந்துள்ளது. மேலும், பார்வையாளர்களுக்கு அது ஒரு விருந்தாக அமையும்'' என்று தயாரிப்பாளர் சி.வி.குமார் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:அவர்கள் என்ன வேண்டுமானலும் செய்வார்கள்; இது நம்ம முறை அன்பை நிரூபிப்போம் - அமைரா தஸ்தூர்