தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

பரபரப்பான புலனாய்வுத் திரில்லராக உருவாகும் அருள்நிதியின் 'டைரி' - தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன்

ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அருள்நிதியின் படங்கள் லாபமீட்டித் தருவதால், இப்போது அவரை தயாரிப்பாளர்களின் சொத்து என்று சொல்லலாம் என்று அருள்நிதி பிரதான கதாபாத்திரத்தில் நடிக்கும் 'டைரி' படத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கூறியுள்ளார்.

Actor Arulnidhi
நடிகர் அருள்நிதி

By

Published : Jul 22, 2020, 11:43 AM IST

சென்னை: அறிமுக இயக்குநர் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் உருவாகும் 'டைரி' என்ற திரில்லர் படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் நடிகர் அருள்நிதி.

அருள்நிதி நடிப்பில் உருவாகவுள்ள படம் 'டைரி'. இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய இன்னாசி பாண்டியன் இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். மர்மங்கள் நிறைந்த புலனாய்வு த்ரில்லர் கதையாக உருவாகும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் வெற்றிமாறன் வெளியிட்டார்.

டைரி ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

இந்தப் படம் குறித்து தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசன் கூறியதாவது:

சர்வதேச ரசனைகளைக்கு ஏற்ற வகையிலான படங்களை உருவாக்குவதில் எங்கள் தயாரிப்பு நிறுவனம் கவனம் செலுத்துகிறது. இயக்குநர் இன்னாசி பாண்டியன் இந்தக் கதையை என்னிடம் கூறியபோது, படத்தின் கதைக் கரு மற்றும் அதை அவர் விவரித்த விதத்தில் நான் பெரிதும் கவரப்பட்டேன்.

இயக்குநர் இன்னாசி பாண்டியன்

திகில் மற்றும் மர்மங்களுடன் ஆச்சரியங்கள் நிரம்பிய கதையாக 'டைரி' படம் இருக்கும். ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் அருள்நிதியின் படங்கள் லாபமீட்டித் தருவதால், இப்போது அவரை தயாரிப்பாளர்களின் சொத்து என்று சொல்லலாம்.

படத்தில் பங்கு பெறும் நட்சத்திரங்களும், தொழில்நுட்பக் கலைஞர்களும் மிகுந்த நம்பிக்கையூட்டுபவர்களாக இருப்பதால், தனிப்பட்ட முறையில் நான் 'டைரி' படத்தை திரையில் காண ஆவலாக இருக்கிறேன். அரசாங்கத்தின் அனுபதி கிடைத்ததும் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடக்கும்.

பவித்ரா பிரதான வேடத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் வி.ஜெ.ஷாரா, ஜெயப்பிரகாஷ், கிஷோர், சாம்ஸ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். படத்துக்கு ஒளிப்பதிவு - அரவிந்த் சிங். இசை - ரோன் எதன் யோஹான். படத்தொகுப்பு - எஸ்.பி.ராஜா சேதுபதி.

இதையும் படிங்க: 'கட்டில்' பட பணிக்கிடையே ஸ்ரீகாந்த் தேவாவின் எளிமையான பிறந்தநாள் கொண்டாட்டம்

ABOUT THE AUTHOR

...view details