தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

சுஷாந்த் சிங் மறைவு - உருக்கமான பதிவு வெளியிட்ட தயாரிப்பாளர்! - சுஷாந்த் சிங் மறைவு

நடிகர் சுஷாந்த் சிங்கின் மறைவு குறித்து தயாரிப்பாளர் ஏக்தா கபூர் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Ekta kappor
Ekta kappor

By

Published : Jun 15, 2020, 9:12 PM IST

'தோனி' திரைப்படம் மூலம் பிரபலமான சுஷாந்த் சிங் மன உளைச்சல் காரணமாக நேற்று (ஜூன் 14) தனது வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். 34 வயதில் மறைந்த இவரின் இழப்பை ரசிகர்கள் மட்டுமின்றி, திரைப்பிரபலங்கள் சிலராலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

இதற்கிடையில் இவரின் மறைவு குறித்து திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் தயாரிப்பாளர் ஏக்தா கபூர், சுஷாந்தின் மறைவு குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், 'ஒரு நீண்ட தூக்கமற்ற இரவுக்குப் பிறகு, நான் பகிர்ந்து கொள்ள விரும்பும் ஒரு சில புகைப்படங்கள் #பாலாஜிடெலி பிலிம்ஸ் நிறுவனம் சார்பாக, இந்தப் பதிவை வெளியிடுகிறோம். உங்களின் இறப்பு யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. உங்களையும், உங்களோடு நாங்கள் பகிர்ந்து கொண்ட நினைவுகளும் என்றுமே அழியாது. உங்களின் அம்மாவோடு சேர்ந்து விட்டீர்கள் என்று நம்புகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details